AKARAM

அகரம் சுவடி 11
14.02.2012 – 13.03.2012

<object id="7a691481-6ccb-2b98-700c-9d9c75b21f52" style="width: 600px; height: 440px;" width="320" height="240" classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowfullscreen" value="true" /><param name="menu" value="false" /><param name="wmode" value="transparent" /><param name="src" value="http://static.issuu.com/webembed/viewers/style1/v2/IssuuReader.swf" /><param name="flashvars" value="mode=mini&backgroundColor=%23222222&documentId=120328230759-9abdc3cbe1dc40d18cc4627c7f426e00" /><embed id="7a691481-6ccb-2b98-700c-9d9c75b21f52" style="width: 600px; height: 440px;" width="320" height="240" type="application/x-shockwave-flash" src="http://static.issuu.com/webembed/viewers/style1/v2/IssuuReader.swf" allowfullscreen="true" menu="false" wmode="transparent" flashvars="mode=mini&backgroundColor=%23222222&documentId=120328230759-9abdc3cbe1dc40d18cc4627c7f426e00" /></object>

அகரம் சுவடி 10
14.02.2012 – 13.03.2012

<object id="61c6ac14-0b16-0315-c419-507211d46d8c" style="width: 600px; height: 350px;" width="320" height="240" classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowfullscreen" value="true" /><param name="menu" value="false" /><param name="wmode" value="transparent" /><param name="src" value="http://static.issuu.com/webembed/viewers/style1/v2/IssuuReader.swf" /><param name="flashvars" value="mode=mini&backgroundColor=%23222222&documentId=120307111013-7ba51e6db7664c84a8bb39f258340373" /><embed id="61c6ac14-0b16-0315-c419-507211d46d8c" style="width: 600px; height: 350px;" width="320" height="240" type="application/x-shockwave-flash" src="http://static.issuu.com/webembed/viewers/style1/v2/IssuuReader.swf" allowfullscreen="true" menu="false" wmode="transparent" flashvars="mode=mini&backgroundColor=%23222222&documentId=120307111013-7ba51e6db7664c84a8bb39f258340373" /></object>

திருமண வீட்டில் நானே மணமகன், இழவு வீட்டில் நானே பிணம்!
கிழக்கு மாகாண சபையைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிள்ளையான் தலைமையிலான ஆளும் தரப்பினர் தமது எதிர்கால இருப்பு தொடர்பில் அச்சம் கொண்டுள்ளமை அவர்களின் அண்மைக்கால நடவடிக்கைகளின் மூலம் வெளிப்பட்டு வருகின்றது. கடந்த தேர்தலில் எதிரிகள் இல்லாத களத்தில் போட்டியிட்டு வென்றதைப் போன்று அடுத்துவரும் தேர்தலில் இலகுவில் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்து கொண்டு தமது போட்டியாளர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஓரங்கட்டும் செயற்பாடுகளிலும், அவர்கள் மீது வசைபாடும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். பொது அரங்குகளில் தமது குரல் மட்டுமே ஒலிக்க வேண்டும் என விரும்பும் அவர்கள் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள், பரிசளிப்பு விழாக்கள் என்பவற்றுக்குக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்கக் கூடாது என உத்தியோகப் பற்றற்ற முறையில் உத்தரவுகளைப் பிறப்பித்து வருவதுடன் தமது உத்தரவுகளை மீறுவோரை எச்சரித்தும் வருகின்றனர். கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் பொதுமக்களின் செல்வாக்கைப் பெறும் வழிவகைகளைத் தடுத்துவிட விரும்பும் அவர்கள், அனைத்து நிகழ்வுகளுக்கும் தம்மைத் தவிர வேறு எவரையும் அழைக்கக் கூடாது என வெட்கம்கெட்ட தனமாக வேண்டுகோள் விடுத்தும் வருகின்றனர்.

திருமண வீடாயின் மணமகனாகவும், இழவு வீடாயின் பிணமாகவும் தானே இருக்க வேண்டும் என நினைப்பதற்கு ஒப்பானது இது.

எப்பாடுபட்டாவது தேர்தல்களில் வெற்றி பெறுவதனூடாக தாம் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளோம் என நிரூபிக்க விரும்பும் இவர்கள் தாம் மேடையேறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமது போட்டியாளர்கள் எனக் கருதும் கூட்டமைப்பை விமர்சிப்பதிலும், வசைபாடுவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். மக்களுக்குச் சிறந்த தலைமைத்துவத்தை வழங்க வக்கற்ற இவர்கள் பொய்களையும், புரட்டுக்களையும் தமது பேச்சுக்களின் ஊடாக அவிழ்த்துவிட்டு வருகின்றனர்.

இலவசங்களையும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்குவதன் ஊடாக மக்களைத் தமது ஆதரவாளர்களாக வைத்துக் கொள்ள முடியும் என்ற வரட்டுத்தனமான சிந்தனையைக் கடைப்பிடிக்கும் இவர்கள், வடக்கிலே ஈ.பி.டி.பி. செய்வதைப் போன்ற காரியங்களில் கிழக்கில் ஈடுபட எத்தனிக்கின்றனர். வடக்கில் எவ்வாறு மாகாண ஆளுனர் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஓரங்கட்டி வருகின்றாரோ அவ்வாறே கிழக்கிலும் செய்வதற்கு எத்தனிக்கின்றனர்.

இத்தகைய செயற்பாடுகள் யாவையுமே தமது எதிர்கால வெற்றி மீது இவர்கள் கொண்டுள்ள அவநம்பிக்கையின் வெளிப்பாடுகளே.

எதிர்க் கட்சியின் செயற்பாடென்பது ஆளும் கட்சி எடுக்கின்ற முடிவுகளில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவும், செயற்பாடுகளில் மேம்பாடு சார்ந்து குறை நிறைகளைத் தெரிவிப்பதற்காகவுமே என்பதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் அடங்கிய ஆளும் தரப்பு உணரவில்லைப் போல் தெரிகிறது.

இலங்கையைப் பொறுத்த வரையில், தமிழர்களின் ஜீவாதாரப் பிரச்சினைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றுக்கு தமிழ் அரசியல்வாதிகள் முன்னுரிமை கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மறுக்கப்படும் உரிமைகள் பற்றிப் பேசவும் போராடவும் வேண்டிய அவசியமும் இருக்கிறது. அதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர்.

ஆளும் தரப்பினரைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றித் தான்தோன்றித் தனமாகவும், தங்களுடைய அறிவுகளுக்கு எட்டிய வரையிலும், தங்களது அடிவருடிகள் சொல்பவற்றை வைத்துக் கொண்டும் தீர்மானங்களை எடுத்து வருகின்றனர். இதனால் அவர்களுடைய செயற்பாடுகள் மிகச் சின்னத்தனமாக இருக்கின்றன என்றே கூறவேண்டும்.

அரசியலுக்குள் பிரவேசித்து ஒரு சில வருடங்களிலேயே தமக்கு அரசியல் சாணக்கியம் வந்து விட்டதாக நினைக்கும் மாகாண சபையின் ஆளும் தரப்பினர் சிறுபிள்ளைத் தனமாக நெஞ்சில் அடித்து உரையாற்றுவதனைக் காண முடிகிறது.

கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையான் அண்மையில் மட்டக்களப்பில் ஒரு நிகழ்வில் பேசுகையில், ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எமது சமூகத்தின் கடந்தகால வரலாறுகளைக் கற்றுக் கொள்ளாமை கவலையளிக்கிறது. ஒரு சமூகம் தனது கடந்த காலப் பின்னணி மற்றும் நடைமுறைகள், எதிர்காலத்தில் தனது சமூகம் பயணிக்க வேண்டிய முறைமைகள் என்பன பற்றித் திட்டமிடுவதற்குக் கட்டாயம் நாம் எமது கடந்த கால வரலாறுகளைக் கற்றே ஆக வேண்டும். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கற்றுக் கொள்ளவில்லை என்பது வேதனையளிக்கின்றது’ எனத் தெரிவித்திருந்தார்.

‘1944 ஆம் ஆண்டு டபிள்யு, டபிள்யு. கன்னங்கரா அவர்களினால் கொண்டுவரப்பட்ட இலவசக் கல்வி மசோதாவை முதன்முதலில் எதிர்த்தவர்கள் ஜீ.ஜீ. பொன்னம்பலம், மகாதேவா, சிறி. பத்மநாதன், இவர்களெல்லாம் யார்? தமிழர்களின் தலைவர்கள் இல்லையா? மகாதேவா என்பவர் தாங்கள் புகழ்ந்து கொண்டிருக்கும் சேர் பொன்னம்பலம் அருனாச்சலம் அவர்களின் புதல்வர் என்பது தங்களுக்கு தெரியாதோ என்னமோ? இவர்களெல்லாம் இந்து வேளாளர் உயர்குலத்தில் பிறந்த வடக்குத் தமிழர்கள் தான். இவர்களின் வழி வந்தவர்கள்தான் இந்தத் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினர் என்பதை தன்னால் புரிந்து கொள்ளமுடியாமல் போனதற்காக நான் வருந்துகின்றேன்.’

‘எது எவ்வாறாக இருந்தாலும் இலவசக் கல்வி முறையினை எதிர்த்த தமிழ்த் தலைவர்கள் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் மூதாதையர்கள் என்பதனை நான் ஆணித்தரமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்;. கடந்த காலங்களில் கிழக்கு மாகாண மக்களை ஏமாற்றிய அந்த தலைமைகளுக்கு இன்றும் வக்காளத்து வாங்கும் அடிவருடிகள் இருக்கும்வரை எமது மாகாணம் உருப்படாது. அவ்வாறானவர்களை இனங்கண்டு எமது மக்கள் அவர்களைத் துரத்தி விரட்டும் காலம் வெகு விரைவில் வந்து விடும்’ என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.

அவருடைய மேற்படி கருத்துக்கள் அவரது அரசியல் அறிவின் வரட்டுத் தனத்தையே காட்டி நிற்கிறது. ஏனெனில் கடந்த கால அரசியல் தலைவர்கள் மீது குற்றம் சுமத்துவதாகக் கருதிக் கொண்டு அவர் ஒரு தரப்புக்கு ஆதரவாகவே பேசி வருகின்றார்.

இத்தகைய பாரதூரமான கருத்துக்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் பல இடங்களிலும் முன்வைக்கும் பிள்ளையான், பிரதேசவாதத்தினை வடக்கு கிழக்கு மக்களிடையே ஏற்படுத்தும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அதே நேரம் கடந்த மாதம் முதல் பாடசாலைகள், பொது அமைப்புக்கள், நிறுவனங்கள் போன்ற அனைத்துத் தரப்பினருடைய நிகழ்வுகளிலும் ஆளும் தரப்பினர் தவிர்ந்த வேறு எவரையும் அழைக்கக் கூடாது என எழுதப்படாத அறிவித்தல் ஒன்றையும் விடுத்துள்ளார். அதன் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நிகழ்வுகள் எதற்கும் அழைக்கப்படுவதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட முடியாத சூழலை உருவாக்கிவிட்டு மாகாணசபைத் தேர்தலை நடாத்தியதுடன், பெருமளவான மக்கள் வாக்களிக்காத நிலையைப் பயன்படுத்தி அதிகளவான கள்ள வாக்குகளையும் போட்டு மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட பிள்ளையான் அரசியல் சாணக்கியம் பற்றியும்;, தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் பற்றியும், வரலாறு பற்றியும் பேசுவதைப் பார்க்கும் போது நகைப்பாக இருக்கிறது.

அபிவிருத்தி விடயத்தி;ல் கூட, மக்களின் தேவைகளை அறிந்து உரிய விபரங்கள் திரட்டப்பட்டு, முறையான திட்டங்கள் தீட்டப்பட்டு செயற்பாடுகள் இடம்பெறுவதாகத் தெரியவில்ல. இருப்பினும் தினமும் ஏதாவது ஒரு இடத்தில் அடிக்கல் நாட்டுவிழா, வீதித் திறப்புவிழா, கட்டடத் திறப்புவிழா என விழாக்கள் நடைபெற்ற வண்ணமேயே உள்ளன. இதில் கூட குறிப்பிட்ட பிரதேசங்களே உள்ளடக்கப் படுகின்றன. குறிப்பாகச் சொல்வதானால் பிள்ளையானின் பிறந்த ஊரான வாழைச்சேனை – பேத்தாளை மற்றும் பிரசாந்தனின் ஊரான ஆரையம்பதி போன்ற பிரதேசங்களை அண்டியே இத்தகைய பணிகள் நடைபெற்று வருகின்றன.

அபிவிருத்தி என்ற போர்வையில் தனிப்பட்ட நலன் பேணலும், தமது சுயலாபத்துக்கானதும், வருமானம் ஈட்டும் வகையிலுமான செயற்பாடுகளுமே நடைபெற்று வருகின்றன.

‘நீண்ட அரசியல் கலாசாரம் உடைய தமிழர்கள் வெறும் நூறு வருட அரசியல் வரலாறு கொண்டவர்கள், எல்லாளன் காலத்தில் கூட மட்டக்களப்பார்கள் போருக்குச் சென்றிருக்கிறார்கள். அப்போதும் வீரத்தை வெளிப்படுத்துபவர்களாக நம்மவர்கள் இருந்திருக்கிறார்கள். அரசியல் தெரியாத விடயமாக இருந்திருக்கிறது. வடக்குத் தமிழர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள்’ என்றெல்லாம் கூறிவரும் பிள்ளையான் கிழக்குத் தமிழர்களுக்கென சரியான முறையில் தீர்வு எதனையும் முன்வைக்கவில்லை. தமிழ் மக்களின் பொருளாதாரக் கல்வி முன்னேற்றங்களைத் திட்டமிட்டு நடத்தவும் தயாரில்லை.

மக்களிடம் ஆதரவு இருந்ததாகச் சொல்லப்பட்ட பிரதேசவாதச் சிந்தனை உசுப்பிவிடப்பட்ட காலம் போன்று இப்போது மீண்டும் தேர்தல்கள் வரவிருக்கின்றன என்ற எண்ணத்தில் நேரடியாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நிகழ்வுகளில் சந்தித்து கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத, குறைகளை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் நிகழ்வுத் தடைகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கென உருவாக்கப்பட்ட தடையில் ஏனைய எதிர்க் கட்சியினரும் சிக்கியிருக்கின்றனர் என்பதே இதில் வேடிக்கை.

கிழக்கின் அபிவிருத்தி பற்றி சிந்திக்கும் ஒவ்வொருவரும் பிரதேசத்தின் அமைதியிலும், மக்களின் மகிழ்ச்சியிலும் அக்கறை செலுத்தியே ஆகவேண்டும். கிழக்கை அபிவிருத்தி செய்தல் என்பது ஒரு மிக நீண்ட காலத் திட்டமாகும். அது வடக்குடன் இணைந்ததாகவே கொண்டு செல்லப்பட வேண்டும். ஒழுங்கு படுத்தல்கள் மிகவும் சீராகவும், நேர்த்தியாகவும், திறமையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். மக்களின் உடனடி மற்றும் நீண்டகாலத் தேவைகளை நன்கறிந்து கால ஓட்டம், உலகமயமாக்கலின் வேகம், தொழில்நுட்ப மாற்றங்கள், மக்களின் வாழ்க்கைத்தர உயர்ச்சி ஆகியவை உள்ளிட்ட பல விடயங்கள் நன்கு கவனத்தில் எடுத்து அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மக்களின் உரிமைகள் நிறைவேற்றப்படாத நிலையில் அபிவிருத்தி என்ற போர்வையில் வெளியூர்க்காரர்கள் வந்து செல்வதற்கு மாத்திரம் வசதியாகப் பிரதான வீதிகளைத் திருத்திவிட்டுக் கண்துடைப்புக்காக ஒருசில பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்து விட்டுத் தமிழர் பிரதேசங்களில் சிறப்பாக அபிவிருத்திகள் நடைபெறுகின்றன என்று தம்பட்டம் அடித்து வருகின்றனர்.

அந்தவகையில் பொது நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொள்வதைத் தடுக்கும் முயற்சிகள் எதிர்வரும் தேர்தலிலும் அவர்கள் போட்டியிட முடியாத ஒரு சூழலைத் தோற்றுவிப்பதற்கான முன்னோட்டமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கூட்டமைப்பினரின் குரலைத் தடுப்பதென்பது ஒட்டு மொத்தத் தமிழர்களின் கருத்துக்களையும் தடுப்பதற்குச் சமமாக ஆகிவிடாது என்பதனை ஆளும் தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும்.

தமது பதவிகளையும் இடங்களையும் தக்கவைத்துக் கொள்வதற்காக அரசியல்வாதிகளின் கால்களைப் பிடிக்கும் அதிகாரிகள் ஆலோசனை சொல்வதை விடுத்து அரசியல்வாதிகளின் விருப்பத்துக்கு ஏற்ப ஜால்ரா போடுபவர்களாகவே உள்ளனர். இந்த நிலையில் மாற்றம் வர வேண்டும் என்றே தமிழ் மக்கள் விரும்புகின்றனர்.

வெளிநாடுகளைப் பொறுத்த வரையில் அபிவிருத்திப் பணிகள் யாவையும் மக்களின் தேவை, சனத்தொகை வளர்ச்சி, எதிர்கால மேம்பாடுகள் எனப் பல விடயங்களையும் கவனத்தில் எடுத்தே திட்டமிடப்படுகின்றன. அதனாலேயே அன்றாடச் சவால்ளை சிறந்த முறையில் அந்நாடுகளால் எதிர்கொள்ளக் கூடியதாக இருக்கின்றன.

தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகக் காலனித்துவ சக்திகள் மேற்கொண்ட இன்னமும் நல்லநிலையி;ல் உள்ள வடிகாலமைப்பு, போக்குவரத்து, தொழில்துறைக் கட்டமைப்புகளைக்; கொண்டே இன்றும் அனைத்துப் பிரதேசங்களும் செயற்பட்டு வருகின்றன என்பதே யதார்த்தம்.

மக்களின் அரசியல் உரிமைகளை மறுத்துவிட்டு வெறும் அபிவிருத்தி;ப் பணிகளை மேற்கொள்வதால் மாத்திரம் மக்களை வளைத்துப் போட்டுவிட முடியாது என்பதைப் பி;ள்ளையான் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமது போட்டியாளர்களின் கருத்துக்கள் மக்களைச் சென்றடைவதை; தடுப்பது என்ற வகையிலான போக்கை ஆளும் தரப்பினர் தொடர்ந்தும் கடைப்பிடிக்கின்றமை எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும். வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்பதைப் புரிந்து கொண்டு நடப்பதே அனைவருக்கும் நல்லது.

-இலட்சுமணன்-

சாதனைச் செல்வியா? சாதாரணச் செல்வியா ?
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பிறந்துள்ள புத்தாண்டுச் செய்தியாகப் பலவற்றைச் சாதிக்கத் தமது சாதனைப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டின் செலவாக தனது தோழி சசிகலாவையும் அவரது ஆதரவாளர்களையும் தமது வீட்டில் இருந்தும் கூட்டில் இருந்தும் கைகழுவி விட்டிருக்கிறார். ஆனாலும் அவர் கலைஞர் குறிப்பிட்டது போன்ற ஒரு கூடா நட்பாக இருந்த ஒன்றை அடையாளம் கண்டு மிகத் துணிச்சலாக அதிரடி நடவடிக்கைகள் மூலம் தமது சுபாவத்தைக் காட்டி விட்டார்.

பல தற்காப்பு ராஜதந்திர வியூகமாக அவரது பட்டியலில் ஈழத் தமிழர் பற்றி எதுவும் குறிப்பாக இல்லை என்பது பலரின் கண்டனத்தை அவருக்குக் கொடுக்கலாம். ஆனால் அவரது இன்னொரு செய்தியாக அடுத்த ஆட்சியை அ.இ.அ.தி.மு.கவே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என வெளிவந்து பின்னர் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது போல் தெரிகிறது.

எது எப்படியோ அவர் இப்போ அடுத்த கட்டம் நோக்கிய நடவடிக்கையில் தீவிரமாகி உள்ளார் என்பது தெளிவாகிறது. அவர் சாதாரண நாயகி அல்ல சாதனை நாயகி என்பதை நிரூபிக்க ஆண்டவன் அவருக்கு நீண்ட ஆயுளும்   ஆரோக்கியமும் அருள்வாராக.

ஈழத் தமிழருக்கு விடியலை ஏற்படுத்த வல்லவராக இருக்கும் ஒருவராக அகரம் அவரைத் தொலை நோக்கோடு; பார்க்கிறது. ஆழிக் கடலில் தத்தளிக்கும் எமக்கு கண்ணுக்கும் கைக்கும் எட்டிய தூரத்தில் அவர் மட்டுமே தெரிகிறார்.

வடலி வளர்த்துக் கள்ளுக் குடிக்க நினைப்பவர் நாம். பனை மரங்களாக நம்பி இருந்தவர்களை எல்லாம் பறி கொடுத்த நிலையில் நாம் வடலியைத்தானே நம்ப வேண்டும்?

ஹிஸ்புல்லாவிற்கு ஏன் இந்தக் ‘கொலைவெறி’?
‘வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தையில் (மகிந்த ராஜபக்ஷ) அரசாங்கம் ஒருபோதும் பங்குபற்றக் கூடாது. அவ்வாறு வடக்கு கிழக்கு இணைப்புக்கு அரசாங்கம் இணங்குமானால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம்’ எனப் பொதுஜன ஐக்கிய முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரங்களுக்கான பிரதி அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவரது சொந்த இடமான காத்தான்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் பேசிய அவர், ‘இரண்டு மாகாணங்களும் இணைந்திருந்த போது மூவின மக்களும் முட்டிமோதி இரத்த ஆறே ஓடியது. கிழக்கு பிரிக்கப் பட்டதை அடுத்து இன்று அந்த மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்’ என மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இன முரண்பாட்டுக்கு அடிப்படையாக இதுவரை வேறு எவருமே கூறியிராத ஒரு புதிய காரணத்தைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளார் ஹிஸ்புல்லா. அதாவது ‘வடக்கு கிழக்கு இணைந்திருந்தமையே இரத்த ஆறு ஓடியமைக்குக் காரணம். அது பிரிக்கப்பட்டு இருந்திருந்தால் இரத்த ஆறு ஓடியே இருந்திருக்காது’ என்ற அவரின் கண்டுபிடிப்பு நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கக் கூடிய ஒன்று.

வரலாற்று ரீதியாக இணைந்தே இருந்த தமிழர் தாயகமான வடக்கு கிழக்கை குடியேற்றவாதிகளான ஆங்கிலேயர் கூடப் பிரிக்க நினைக்கவில்லை. தமது நிர்வாக வசதிகளுக்காக சிங்களவர்களே அதனைப் பிரித்தனர். இவ்வாறு பிரிக்கப் பட்டிருந்த வடக்கும் கிழக்கும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக சட்டபூர்வமாக இணைக்கப்பட்ட 1987 காலப்பகுதியில் அரசியலுக்கு வந்தவர் ஹிஸ்புல்லா. இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாட் இலங்கையில் காலூன்றிய வேளையில் 1984 ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் காத்தான்குடியில் இடம்பெற்ற வீதிமறியல் போராட்டங்களில் பங்கெடுத்தவர் அவர். அரசியல் விஞ்ஞானத்தை ஒரு பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பை முடித்த அவருக்கு வடக்கு கிழக்கு சட்டபூர்வமாக இணைக்கப்பட்டமைக்கு முன்னதாகவே, 1983 இல் தமிழர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட இனப்படுகொலையின் வரலாறு பற்றியும், அதற்கு முன்னர் காலங்காலமாகத் தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட வகையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ‘இனக் கலவரம்’ என்ற பெயரில் துன்புறுத்தப்பட்டு வந்தமை பற்றியும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

அவை மட்டுமன்றி, 1957 இல் செய்து கொள்ளப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தம், 1965 இல் கைச்சாத்திடப்பட்ட

டட்லி-செல்வா ஒப்பந்தம் போன்றவை ஏன் செய்து கொள்ளப்பட்டன, அவை ஏன் அமுல்படுத்தப் படவில்லை என்பதற்கான காரணங்களையும் அவர் கண்டிப்பாக அறிந்திருப்பார்.

இத்தனையையும் அறிந்து வைத்துக் கொண்டு தமிழர்கள் அமைக்கப் போகும் தனிநாட்டில் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளைத் தக்க வைக்கும் நோக்குடன் மர்ஹ_ம் அஷ்ரப் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்தவர் ஹிஸ்புல்லா. முஸ்லிம் காங்கிரசின் தலைவராக அஷ்ரப் இருந்த போதிலும் பின்னாளில் அதன் தலைமைப் பொறுப்பை ரவூப் ஹக்கீம் ஏற்றுக் கொண்ட காலப் பகுதியிலும், வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் பேசியதில்லை. மாறாக, இணைந்த தமிழர் தாயகத்தில் முஸ்லிம்களுக்குத் தனியலகு அமைத்தல், அல்லது கிழக்கு மாகாணத்தை மூன்றாகப் பிரித்துத் தமிழ்ப் பகுதியை வடக்குடன் இணைத்தல், முஸ்லிம்களுக்குத் தனியான நிர்வாகத்தை ஏற்படுத்துதல் என்ற அடிப்படையிலான கருத்தாடல்களே இடம்பெற்று வந்தன.

அரசியல் நோக்கங்களுக்காக தீவிர முஸ்லிம் அடிப்படைவாதியாகத் தன்னைக் காட்டிக் கொண்டாலும் தமிழ் மக்களோடு உண்மையான அன்புடன் பழகும் ஹிஸ்புல்லா தன்னுடைய இரண்டு தசாப்தங்களுக்கு மேற்பட்ட அரசியல் வாழ்வில் முன்னர் எப்போதும் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராகப் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்திருக்கவில்லை.

தபால் தொலைத் தொடர்புகள் பிரதி அமைச்சராக இவர் பதவி வகித்த காலத்தில் தமிழ் மக்களுக்கும், குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கும் இவர் செய்த உதவிகள் அளப்பரியவை.

அவ்வாறானால், வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக ஹிஸ்புல்லா இன்று இத்தனை ஆக்கிரோஷமாகக் குரல் எழுப்பக் காரணம் எதுவாக இருக்க முடியும்?

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி பற்றிய தனது கனவை கடந்த மாகாணசபைத் தேர்தலின் போது அவர் பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறு வடக்கு கிழக்கு இணைப்பைப் பகிரங்கமாக அவர் எதிர்க்க இந்தப் பதவி ஆசையொன்றே காரணமாக இருக்க முடியும்.

தற்போதைய நிலையில் கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடாத்தப்படுமானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்து தற்போது ஆளும் அணியில் உள்ள முஸ்லிம் கட்சிகள் பொதுசன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடுமானால் தமிழர் அல்லாத ஒருவர் முதலமைச்சராக வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. இத்தகைய ஒரு நிலையில் அந்த ஒருவராகத் தான் வரவேண்டும் என்பதே ஹிஸ்புல்லாவின் கனவு.

எத்தகைய அரசியல் பின்னணியும் இல்லாத சாதாரண குடும்பமொன்றில் இருந்து அரசியலுக்கு வந்த ஹிஸ்புல்லா, ஒரு கட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அஷ்ரப்புக்கே சவால்விடக் கூடிய ஒரு அரசியல்வாதி என்ற நிலையை மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாக்கியிருந்தார். குறிப்பாக காத்தான்குடியில் அவரது அனுமதியின்றி எதுவுமே நடக்க முடியாது என்ற நிலை இருந்து வந்தது.

அவரை அரசியலில் இருந்து ஒழித்துக்கட்ட முடியாவிட்டால் அவரையே ஒழித்துக்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதெல்லாம், மிக இலவசமாக அவற்றிலிருந்து தப்பி, தேவைக்கேற்ப அணிகளை மாற்றிக்; கொண்டு தனது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டு வலம் வருபவர் ஹிஸ்புல்லா.

தனது இளமைக் காலத்தில் தமிழ்ச் சகோதரர்களுடன் அவர் அந்நியோன்னியமாக வாழ்ந்த தருணங்களை மறந்துவிட்டு இன்று வெறும் அரசியல்வாதியாக மட்டும் பேசுவது அவரது தற்போதைய எசமானர்களைத் திருப்திப்படுத்த உதவுமே ஒழிய, அவரது ஆன்மாவை நிச்சயம் திருப்திப் படுத்தாது என நம்பலாம்.

மூன்று தசாப்த காலங்களில் தமிழ் மக்கள் சிந்திய இரத்தம் இன்னமும் தமிழர் தாயகத்தில் காய்ந்து விடவில்லை. சுயநிர்ணய உரிமைக்கான தமது போராட்டத்தில் தமிழ் மக்கள் சிந்திய இரத்தம் தேவையைவிட அதிகம். அதேவேளை, இந்த மண்ணைத் தமிழர்களின் குருதி மாத்திரமன்றி முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களின் குருதியும் நனைத்திருப்பதையும் மறைத்து விடுவதற்கில்லை.

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ள இன்றைய காலச் சூழலில் இலங்கையின் இன முரண்பாட்டுக்குத் தீர்வு கிட்டக் கூடிய நம்பிக்கைக் கீற்றுக்கள் தென்பட்டு வருகின்றன. இவ்வாறு வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்து விடுவதற்கு ஒப்ப, விவகாரத்தை மற்றுமொரு கருத்துப் போருக்குத் திசைதிருப்பி விடுவதைப் போன்று ஹிஸ்புல்லாவின் கருத்துக்கள் அமைந்துள்ளமை வேதனை தருகின்றது.

ஒரே மொழியைப் பேசும் தமிழர்களும் முஸ்லிம்களும் அந்நியோன்னியமாக வாழ வேண்டியவர்கள், காலச் சூழல் காரணமாகத் தமிழர்களும் முஸ்லிம்களும் எதிர் எதிர் நிலையில் கடந்த காலத்தில் வைக்கப் பட்டிருந்தாலும் அவர்களது உறவு சகோதரத்துவ அடிப்படையிலானது. அவ்வாறே அது கட்டியெழுப்பப்படவும் வேண்டும்.

கடந்தகால அரசியலில் பல தரப்பினராலும் கையாளப்பட்ட பிரித்தாளும் தந்திரோபாயத்துக்கு இரண்டு இனங்களும் பலியாகியது போதும். இனிமேலும் அவை தொடர இடமளிக்கக் கூடாது.

இன்றைய நிலையில் அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்குடன் நடாத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் தமிழர் சார்பு அணியில் முஸ்லிம்களின் குரலாக சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசையும் இணைத்துக் கொள்ளத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்துள்ளமை வரவேற்கத் தக்க விடயம். இது தமிழ்-முஸ்லிம் மக்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இரு மக்கள் கூட்டத்தினதும் தனித்தன்மையை மதித்து, என்றென்றும் சகோதரத்துவத்துடன் கைகோர்த்து வாழ நினைப்பதன் அடையாளமாகக் கொள்ளப்பட வேண்டும்.

அதேவேளை, முஸ்லிம்களைத் தமது அரசின் பங்காளிகள் எனக் கூறிக் கொள்ளும் மகிந்த அரசு இந்தப் பேச்சுக்களில் முஸ்லிம்களை ஒரு தனித் தரப்பாக இணைத்துக் கொள்ள நினைக்கவில்லை. இது விடயத்தில் அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதை ஹிஸ்புல்லா போன்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கைத் தீவில் இதுவரை நிகழ்ந்த இரத்தக் களரிகள் போதும். இனிமேலும் அதுபோன்றதொரு நிகழ்வு தேவையற்றது. வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தமிழ் மக்களின் ஜீவாதாரக் கோரிக்கை. இந்தக் கோரிக்கை சடுதியாகத் தோன்றிய ஒன்றல்ல. தமது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் நீண்டகாலப் போராட்டத்தின் தொடர்ச்சியாக முகிழ்த்த கோரிக்கை அது. அது சமரசங்களுக்கு அப்பாற்பட்டது. இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் உயிர்களின், கோடிக் கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களின் இழப்பு, உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்ட இலட்சக் கணக்கான தமிழ் உறவுகளின் துயரம் என்பவை அக் கோரிக்கையின் அடிநாதமாக உள்ளது.

இந்நிலையில், புதிய பிரச்சனைகளைத் தோற்றுவித்து, எதிரியின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இடம் தந்து மற்றுமொரு இரத்தக் களரிக்கு வித்திட்டவர் என்ற அவப்பெயர் ஹிஸ்புல்லாவிற்குத் தேவையற்றது. எனவே, ‘எப்பாடுபட்டாவது வடக்கு கிழக்கு இணைப்பைத் தடுத்துவிடுவது’ எனும் விடயத்தில் அவர் தனது கொலைவெறியைக் கைவிட வேண்டும் என்பதே தமிழ் முஸ்லிம் சகோதரத்துவத்தை விரும்பும் அனைவரதும் வேண்டுகோள் ஆகும்.

-சண் தவராஜா-

உலகின் மூலையில் ஒரு கொடூரச்சிறை!
உலகின் ஒவ்வொரு மூலையிலும் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு நிகராக, சிறைகளில் அடைக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது. தனிநபர் சுதந்திரத்தின் மீது வகுக்கப்படும் எல்லையே சிறை எனப்படுகிறது. ஆனால் அதனையும் மீறி, உடல் உள ரீதியான உபாதைகள் தரும் சித்திரவதைக் கூடங்களாகவும் பல சிறைகள் மாற்றம் பெற்று வருவது யாவரும் அறிந்ததொன்று. உதாரணமாக, இலங்கையில் இருக்கும் , வெலிக்கடை, பூசா, மகசீன், போகம்பர , நீர்கொழும்புச்சிறை, ஆகிய சிறைகளில் தரப்படும் உடல் உபாதைகள் மிகவும் கொடூரமானவை. குறிப்பாக தமிழின இளைஞர்கள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் சிறைகளில், சித்திரவதை புரிவதற்கென்று தனி ´´ஊழியர்கள்´´ சிங்கள அரசால் நியமிக்கப்பட்டிருப்பதை வைத்தே, இச்சிறைகள் எவ்வளவு கொடூரமானவை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளமுடியும்.

மேற்குறிப்பிட்ட சிறைகளில் இரண்டு சிறைகள் எனக்குப் பரீச்சயமானவை. 1998 இல் ஒரு சிறையிலும், 2000 ம் ஆண்டில் ஒரு சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறேன், மூன்றுவேளை வழங்கப்படும் ஆகாரம் தொடங்கி, அன்றாடம் தரப்படும் கடமைகள் வரை, அனைத்துச் செயற்பாடுகளிலும் கொடூரம் நிறைந்திருக்கும். அதுவும் சிறைக்குள் நுழைந்த முதல் வாரம், அமோகமான வரவேற்புக்காத்திருக்கும். பல்கலைக்கழகத்தின் பகிடிவதைக்கு அஞ்சும் மாணவனைப்போல, எப்போ என்ன நடக்கும் எனத் தெரியாது, பயந்தபடியே அவ்வாரம் கழியும். இது உள ரீதியான பாதிப்பை வலுவாக ஏற்படுத்தும். எம்மைப் பார்வையிட வரும் உறவுகளிடம்; சிகரெட், மதுபானம், போதைப்பொருள் ஆகியன தமக்கு வாங்கி வரும்படி அங்குள்ள பெரும்பான்மை இனத்தவர் படுத்தும் பாடு சொல்லில் அடங்காது. அதைவிடவும் வெளியேயுள்ள தமது மனைவி மக்களுக்கு, பணஉதவி செய்யும்படி, எம்மை எமது உறவுகளிடம் கோருமாறு தரப்படும் இம்சை வேறு. இவை எல்லாவற்றையும் விட உடல்ரீதியான சித்திரவதையை எழுதுவதென்றால் இப்பக்கம் போதாது.

மேற்குறிப்பிட்ட சிறைகளும், சித்திரைவதைகளும், அநேகமான தமிழர்களுக்குப் பரீச்சயமானவை. ஆனால் உலகின் ஒரு மூலையில், வெளி உலகின் பார்வைக்குப் படாத வகையில், மிகவும் கொடூரமான சித்திரவதைக்கூடம் கொண்ட ஒரு சிறை இயங்கிவருவது நம்மில் பலருக்குத் தெரியாது. அதுதான் அமெரிக்க வல்லாதிக்க அரசின் மேற்பார்வையில், கியூபா நாட்டின் ´´குவாண்டனாமோ´´ என்னுமிடத்தில் இயங்கிவரும் சிறையாகும்.

குவாண்டானமோ விரிகுடா என்பது கியூபாவின் தென்கிழக்கில் குவாண்டனாமோ மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு விரிகுடாவாகும். இது கியூபாவின் தெற்கில் உள்ள மிகப் பெரிய துறைமுகம் ஆகும்.1903 இல் கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒரு உடன்படிக்கையின் படி குவாண்டானமோ விரிகுடாவை அமெரிக்கநாடு முடிவற்ற குத்தகைக்குப் பெற்றிருந்தது. இவ்விரிகுடாவில் அமெரிக்காவின் இருப்பை தற்போதைய கியூபா அரசு எதிர்த்து வருகிறது. 1969 ஐ. நா வின் வியென்னா உடன்பாட்டின்படி அமெரிக்க ஆக்கிரமிப்பு சட்டபூர்வமல்லாதது என கியூபா வாதிட்டு வருகிறது.இவ்விரிகுடாவின் தெற்குப் பகுதியில் 1898 இல் கட்டப்பட்ட அமெரிக்காவின் கடற்படைத்தளம் அமைந்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக இத்தளம் போர்க்கைதிகளின் தடுப்புக்கூடமாக இருந்து வருவதுடன், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கைது செய்யப்பட்டவர்கள் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இங்கு தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுதலையாவது மிகவும் அபூர்வமான தொன்றாகவே கருதப்படுகிறது. ஆனால் , தவறாகக் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட ஒரு பத்திரிகையாளர் மூலம் இச்சிறையின் கொடூரங்கள் வெளிக்கொணரப்பட்டன. இங்கு பணியாற்றும் அமெரிக்க இராணுவத்தைச்சேர்ந்தவர்களால், கைதிகள் மிகவும் கொடூரமாக சித்திரவதை செய்யப்படுவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் கண்டிக்கப்பட்டும், இதுவரையில் அமெரிக்க அரசு அதனைக் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அமெரிக்க சனாதிபதியாக ஒபாமா பதவியேற்கும்பொழுது, இச்சிறைச்சாலையை விரைவில் இல்லாதொழிக்கப்போவதாகத் தெரிவித்த நிலையிலும், இதுவரையும் எதுவிதமான மாற்றங்களும் தென்படவில்லை.

அமெரிக்க அதிகாரிகளின் விளக்கங்கள் குவாண்டனாமோ ஒரு சிறையல்ல என்பதாகவே இருக்கிறது. அது ஓர் நன்னடத்தைக்கான முகாம் என்பதாகவே அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் அங்கிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு சிலர், அது ஒரு சித்திரவதைக்கூடம் என்பதை ஆதாரங்களுடன் வெளியிடுகிறார்கள்.

பல்வேறு உலக நாடுகளில், அமெரிக்க அரசால் சந்தேகிக்கப்படுபவர்கள் கைதுசெய்யப்பட்டு இங்குகொண்டுவரப்பட்டு அடைக்கப்படுகிறார்கள். மூகமூடி அணிந்து கைகால்கள் பிணைக்கப்பட்ட நிலையிலேயே எப்போதும் கைதிகள் இருத்தப்படுகிறார்கள். அவர்களை உடல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கும் தேவை உண்டாகும்போது மட்டும், அவர்களது கட்டுக்கள் அவிழ்க்கப்படுகின்றன. எத்தனையோ பேர் இதுவரை சித்திரவதை தாங்கமுடியாது உயிரிழந்திருக்கிறார்கள்.

ஏமன் நாட்டினைச் சேர்ந்த கைதியான Muhamed Saliah என்பவரின் மரணம் பரிதாபத்திற்குரியது. இவர் சிறைக்குள் புகுந்த நாளிலிருந்தே, தன்னை விடுதலைசெய்யக்கோரி உண்ணாநோன்பு மேற்கொண்டிருக்கிறார். 124 பவுண்டுகளாக இருந்த இவரது உடல்நிறை, 86 பவுண்டுகளாகக் குறைந்தபின்பும், இவர்மீது எவ்வித கரிசனையும் காட்டப்படாது அவர் உயிரிழக்கவேண்டியதாயிற்று.

ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த நான்கு கைதிகள் 2006-2007 வரையான காலப்பகுதியில் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகவே அறிவிக்கப்பட்டது. ஆனால் சிறையின் அறையிலோ, அல்லது வெளிப்பகுதியிலோ தற்கொலை செய்துகொள்வதற்கான எவ்வித உபகரணங்களும் கிடையாது. அதைவிட மேலாக, எப்போதுமே கைகள் பிணைக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்கொலை செய்துகொள்வதென்பது இலகுவான காரியமல்ல. இங்கு செல்லும் பத்திரிகையாளர்களுக்கு , ஒரு எழுதுகோல் மற்றும் ஒரு வெள்ளைக்கடதாசி மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதுவும் பெண்பத்திரிகையாளர்கள் என்றால், கடுமையான உடல்பரிசோதனைக்குப் பின்பே அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு சில பத்திரிகையாளர்கள் மட்டும் புகைப்படக் கருவிகளுடன் அனுமதிக்கப்படுகிறார்கள்.

மொத்தமாக 774 கைதிகள் இங்கு சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களில் அதிகமானோர் இஸ்லாமியர்கள். பொதுமக்களின் உயிரிழப்புக்களுக்குப் பாத்திரமானவர்கள் சிறையில் அடைக்கப்படலாம். ஆனால், சந்தேகத்தின் பெயரில், கைதுசெய்யப்பட்டு, நெடுங்காலமாக சிறையில் அடைக்கப்படுபவர்கள் பலர் உளவியல் ரீதியில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது பலரது கருத்து. அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், நடைப்பிணமாகவே தங்கள் காலத்தைக் கழிக்கவேண்டியவர்களாகிறார்கள். ஏனெனில் அவர்களால் சிறையில் அனுபவித்த கொடூரங்களை மறக்கமுடிவதில்லை.

சிறை என்பது மனிதர்களை, மனிதர்களாகவே பேணவேண்டும். குற்றம் செய்யத்தூண்டிய அவர்களின் எண்ணவோட்டம் மாற்றியமைக்கப்படவேண்டிய ஒரு நன்நடத்தைக்கூடமாகவே சிறை அமையவேண்டும், அவர்களை உடல்ரீதியிலான உபாதைகளுக்கு உள்ளாக்குவதால், அவர்களின் பகைமையுணர்வு அதிகரிக்குமே ஒழிய ஒருபோதும் குறையவாய்ப்பில்லை. அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, சிறிலங்காவாக இருந்தாலும் சரி…!

-அறிவழகன்-

அகரம் சுவடி 09
14.01.2012 – 13.02.2012

<object id="7e348a23-d788-0b6f-d2f0-edf0c2b78b1f" style="width: 600px; height: 600px;" width="320" height="240" classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowfullscreen" value="true" /><param name="menu" value="false" /><param name="wmode" value="transparent" /><param name="src" value="http://static.issuu.com/webembed/viewers/style1/v2/IssuuReader.swf" /><param name="flashvars" value="mode=mini&backgroundColor=%23222222&documentId=120121090930-1a1e3c4b850a4f518195637473c09e67" /><embed id="7e348a23-d788-0b6f-d2f0-edf0c2b78b1f" style="width: 600px; height: 600px;" width="320" height="240" type="application/x-shockwave-flash" src="http://static.issuu.com/webembed/viewers/style1/v2/IssuuReader.swf" allowfullscreen="true" menu="false" wmode="transparent" flashvars="mode=mini&backgroundColor=%23222222&documentId=120121090930-1a1e3c4b850a4f518195637473c09e67" /></object>

யேர்மனியில் ஈழத்தமிழர்கள் ஏனைய பல்லின சமூகத்தினரோடான ஒருமைப்பாட்டிற்கு ( Integration ) முன்னுதாரணம் – ஈழத்தமிழர் மக்கள் அவை யேர்மனி
யேர்மனியில் அகதிகளாக புலம்பெயர்ந்து வந்த ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் எமது கலை கலாச்சார சமூகத்தில் வாழ்ந்தாலும் , அதேவேளை ஏனைய பல்லின சமூகத்தினரோடான ஒருமைப்பாட்டிற்கு முன்னுதாரணமாக வாழ்கின்றோம் என யேர்மனிய மக்களால் பாராட்டப்படுகின்றோம் . இவ்வகையிலான பல்லின சமூகத்தில் நாம் இணைவதன் ஊடாக எமது இனத்தின் அடையாளத்தை மற்றும் வரலாற்றை எடுத்துக்கூற பல வாய்ப்புகளை அடையமுடியும் .

அத்தோடு இவ் வகையான நட்புறவுகளை அவர்களுடன் பேணுவதன் ஊடாக இனவழிப்பில் சிக்கித்தவிக்கும் தமிழினத்திற்கு அவர்கள் உரிமை குரல் கொடுப்பதிற்கு நிச்சியமாக அணிதிரள வாய்ப்புகள் உண்டு அத்தோடு எம் இனத்துக்கு சிங்கள இனவெறி அரசு புரிந்த சொல்லில் அடங்கா கொடுமைகளை இலகுவாக கூறமுடியும் .

எமது எதிர்கால உறவுகள் புலம்பெயர் நாடுகளில் பிறந்தாலும் எப்படி எமது தமிழின பண்புடன் எமது கலாச்சாரத்தை மதித்து வாழ்கின்றார்களோ அதேபோல் ஏனைய சமூகத்தினரோடான ஒருமைப்பாட்டிற்கும் தமது பங்களிப்பை புரிந்து ஈழத்தமிழர்களின் நன்மதிப்பை காப்பது கடமையாகும்.

நன்றி

ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி

Volksrat der Eelam Tamilen – Deutschland e.V.

யேர்மனி ஆலன் நகர தமிழ் மக்களால் ஆழிப்பேரலையில் மற்றும் போரில் கொல்லப்பட்ட மக்களுக்காக நினைவஞ்சலி
26 .12 .2011 அன்று காலையில் சுனாமி பேரழிவு 7-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி யேர்மனியில் ஆலன் நகரில் ஆழிப்பேரலையில் மற்றும் போரில் கொல்லப்பட்ட மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அவ் நகர மதகுரு Bernhard Richter தலைமையில் ஆலன் தமிழ் மற்றும் யேர்மனிய மக்களாலும் அஞ்சலி செலுத்தப்பட்டது . அத்தோடு இயற்கை அழிவுக்கு மேலாக இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக செலுத்தப்பட்ட போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் .அதை நினைவு கூரும் முகமாகவும் அவ் நகர தேவாலயத்தில் இருந்து Marktbrunnen எனும் இடத்துக்கு அமைதிப் பேரணி முன்னெடுக்கப்பட்டது .

அத்தோடு அங்கு வருகை தந்திருந்த உள்ளூர் ஊடகத்திற்கு ஆலன் தமிழ் பாடசாலையின் அதிபர் திரு தனபாலசிங்கம் அவர்கள் தமிழ் மக்களின் இன்றைய நிலைமைகளை எடுத்துரைத்ததை தொடர்ந்து சுனாமி பேரழிவு காலத்தில் யேர்மனிய மக்கள் ஆற்றிய உதவிகளுக்கும் நன்றிகளை தெரிவித்தார் .அதேநேரத்தில் அன்றைய நேரத்தில் புனரமைக்கப்பட்ட அனைத்தும் இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட போரால் முற்றாக அழிக்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார் .இறுதியாக 2009 ஆண்டு போர் முடிவடைந்தாலும் இன்று வரை இலங்கை அரசாங்கம் சர்வதேச அமைப்புகளை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை இன்று வரை பாதிக்கப்பட்ட தமிழர் பிரதேசங்களுக்கு போகவிடாமல் , மற்றும் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ள விடாமல் தடுக்கின்றனர் என்பதையும் எடுத்துரைத்தார் .

நினைவஞ்சலியின் தகவல் உள்ளூர் ஊடகமான” Schwäbische Post ” எனும் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது .

http://www.schwaebische-post.de/592263/?aid=592263&date=2011-12-26

http://www.vetd.info/2011/12/im-gedenken-zwei-tsunamis-die.html

மாபெரும் இயற்க்கை அழிவால் கொல்லப்பட்ட மக்களை மறவாமல் , சிறப்பாக யேர்மனிய மக்களையும் இணைத்து இவ் நினைவஞ்சலியை உணர்வுபூர்வமாக முன்னெடுத்த ஆலன் நகர தமிழ் மக்களுக்கு , யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை தனது பாராட்டுக்களை இத்துடன் தெரிவித்துக் கொள்கின்றது .

ஆலன் தமிழ் மக்கள் பல்லாண்டு காலமாக யேர்மனிய மக்களுடன் சமூக இணைவாக்கம் கருதி பல வேலைத்திட்டங்களை முன்மாதிரியாக முன்னெடுப்பவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .

யேர்மன் பெர்லின் நகரிலும் 27 .12 .2011 அன்று நடைபெற்ற தேவாலய ஒளி விழாவில் ஆழிப்பேரலை காவுகொண்ட மக்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது .

ஈழத்தமிழர் மக்கள் அவை -யேர்மனி

Volksrat der Eelam Tamilen Deutschland e.V.

www.vetd.info

கடல்க்கரையில் அந்த கல்லறைகளை என்றும் நினைவு கூறுவோம் – ஈழத்தமிழர் மக்கள் அவை யேர்மனி
சுனாமி பேரலை அனர்த்தத்தின் 7 ம் ஆண்டு நினைவு இன்று. ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும் மறவோம்.

இக்கொடூர பேரலையில் உயிர் நீத்த எமது அனைத்து உறவுகளையும், ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி நினைவு கூருவதுடன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றது .

கடலை நம்பி வாழ்ந்த மக்களை கடலே கொன்றொழித்த சுனாமிப் பேரலை 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் நாள் இந்தோனேசியாவின் சுமாத்திராதீவில் பெரும் குமுறலாக எழுந்து இந்தோனேசியா தமிழீழம், சிறிலங்கா, தமிழ்நாடு உட்பட்ட சில நாடுகளை தாக்கி மிக நீண்ட கடற்கரையோர நிலங்களை அழிவுசெய்து சில மணிநேரத்திலேயே அடங்கிப்போனது. தமிழீழத்தில் முல்லைத்தீவு அம்பாறை மட்டக்களப்பு யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் கரையோரப்பிரதேசங்கள் சுனாமிப்பேரலையால் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கடலால் அள்ளுண்டு போயினர்.இதில் முல்லைத்தீவில் அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டனர். தமிழீழத்தில் பலிகொள்ளப்பட்ட மக்களின் தொகை இருபதாயிரம் ஆகும்.

உலகின் கண்துடைப்பிற்காக சிறி லங்கா இனவெறி அரசு சில உதவிகளை அனுமதித்தது. ஆனால், முழுமையான மீள்கட்டுமானத்திற்கான வேலைகளைத் தடுத்தே வந்தது.ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களை மனித நேயத்தைப் புதைத்துவிட்டு நோக்கிய சிறி லங்காவைப் பற்றி எடுத்துக் கூறினால் அதுவே ஒரு பெரும் தொடராகி விடும். சிறி லங்கா அரசாங்கமோ “மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்க, மாடேறி மிதித்தவன் மேல் மரத்தைத் தறித்து வீழ்த்துவதற்கு” ஒப்பான காழ்ப்புணர்வு கொண்ட வேலைகளையே செய்தது.

ஆனால் ஆழிப் பேரலையின் அழிவிற்குப் பின்னர் தனிநாட்டிற்குரிய பண்போடு அன்று எப்படித் தமிழீழ விடுதலைப் புலிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டார்களோ அதேபோன்று அர்ப்பணிப்பு உணர்வுடன் தமிழரிற்காக வேறு யாரால் செயற்பட முடியும்? 2004 ஆம் ஆண்டு மீட்புப் பணியில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் பணிகளை வெளிநாடுகளில் உள்ள பல ஊடகங்களும் பாராட்டின. முல்லைத்தீவிற்கு 03 சன. 2005 அன்று அழிவுகளைப் பார்வையிட வந்த அன்றைய யுனிசெப் தலைமை இயக்குநர் கரோல் பெலாமி தமிழீழ விடுதலைப் புலிகளின் மீட்புப் பணியையும் நிவாரண வழங்கலில் உள்ள திட்டமிடலையும் வெகுவாகப் பாராட்டினார்.அமெரிக்காவில் ~சிக்காக்கோ றைபியூன|; பத்திரிகை 07.01.05 அன்று தமிழீழ நிர்வாகத் திறமையைப் பட்டியலிட்டதுடன் தனிநாட்டிற்குரிய செயற்பாடுகளைக் கொண்டதெனவும் விபரித்தது இங்கு சுட்டிக்காட்ட வேண்டியது .

நிச்சயமாக சுனாமியால் ஏற்பட்ட காயம், வடு இன்னும் மாறாமல் மக்கள் மனதை விட்டு நீங்காமல் பதிந்துவிட்டது. நம்மால் சொத்தை இழந்தவர்களுக்கு பண உதவி புரியலாம். ஆனால் தன் சொந்தத்தை இழந்து உயிருடன் ஜடமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் நம் மக்களுக்கு, இறந்து மண்ணுக்குல் மறைந்து போன நம் உறவுகளுக்கு நம்முடைய பிரார்த்தனைகளை தவிர வேறென்ன அதற்கு ஈடாக கொடுக்க முடியும்.

பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும் பல்லாயிரக் கணக்கானோரைக் காவுகொண்ட ஆழிப்பேரலையின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று தயவுசெய்து அனைத்து புலம்பெயர் உறவுகளும் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக ஒவ்வொரு வீட்டிலும் சுடர் ஏற்றி மற்றும் பிரார்த்தனைகளையும் , இறைவன் வழிபாடுகளையும் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம் .

ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி

Volksrat der Eelam Tamilen – Deutschland e.V.

www.vetd.info